மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பாராட்டு விழா 01.11.2015 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் கல்லூரியின் நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்துக்கல்லூரியில் தனது 11 ஆண்டுகால கல்விச் சேவை புரிந்த முன்னாள் ஆசிரியர் மற்றும்  இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் மாநகர பிரதி ஆணயாளர் திரு தனஞ்ஜெயன் வரவேற்பு உரை ஆற்றியதுடன் பழைய மாணவர் சங்கத்தலைவர் திரு பஞ்சலிங்கம் அவர்களால் தலைமை உரையாற்றப்பட்டது. பின்னர் கல்லூரியின் சிரேஸ்ட பழைய மாணவரும் முன்னால் பழையமாணவர் சங்கத்தலைவருமான பொன் தவநாயகம் அவர்களால் வாழ்த்துப்பா கவிபாடப்பட்டது. மேலும்  சங்கத்தின் ஆலோசகர் சதாசிவம் அவர்களால் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டு, கல்லூரி அதிபர் அவர்களால் மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  தலைவர் அவர்களால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.




















Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment Blogger

 
. © 2013. All Rights Reserved.
Top